லஞ்சம் பெற்ற தாசில்தார் ,டிரைவர் கைது
மதுரையில் ரூ. 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தாசில்தார் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை மாவட்டம் தெற்கு தாலுகா சின்னஉடைப்பைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் கொசவபட்டியில் கிரஷர் யூனிட் அமைக்க தெற்கு தாலுகாவில் விண்ணப்பித்தார். இதையடுத்து தாசில்தார் இடத்தை ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்குவதற்கு ரூ. ஒருலட்சம் தரவேண்டும் என தாசில்தார் ராஜபாண்டியன் கேட்டார். பேரம் பேசியதில் ரூ.70 ஆயிரம் கொடுத்தால் போதும் என கூறினார்.நேற்று மாலை தெற்கு தாலுகா வந்த ரத்தினத்திடம் டிரைவர் ராம்கேயிடம் (32) லஞ்சப்பணத்தை கொடுக்கும்படி தாசில்தார் கூறினார்.லஞ்சபணத்தை ராம்கே பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையில் தாசில்தார், டிரைவர் ராம்கே ஆகிய இருவரையும் கைது செய்தனர்.