சங்கரன்கோவிலில் நேற்று மாலையில் இடியுடன் கனமழை

சங்கரன்கோவிலில் இடியுடன் கனமழை;

Update: 2025-09-10 01:44 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று மாலையில் இடி, மின்னலுடன் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கனமழை 5.15 மணி வரை விடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. திருவேங்கடம் சாலையில் போடப்பட்ட சிறு பாலத்தின் ஓடை குறுகியிருப்பதால் தண்ணீா் வெளியேற முடியாமல் சாக்கடை நீரும் கலந்து வெள்ளம் போல் ஓடியதால் துா்நாற்றம் வீசியது. இதனால் மக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா். சங்கரன்கோவில் மட்டுமல்லாது திருவேங்கடம், குருக்கள்பட்டி, மருக்காலன்குளம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது.

Similar News