தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்திற்கு லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த சேகர் (60) என்பவர் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் இருந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குருவிகளும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.