குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சையது முகமது அஸ்லாம் (46). ஜமாஅத் செயலாளராக உள்ளார். ஜமா அத்துக்கு சொந்தமான நான்கரை ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஷேக் முகமது (58)என்பவர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதை மீட்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஷேக் முகம்மதுக்கும் செய்யது முகமது அஸ்லாமுக்கு முன் விரோதம் உள்ளது. இந்த நிலையில் சம்போதனம் செய்யது முகமது அஸ்லாம் வீட்டிற்கு சென்ற சேக் முகமது கொலை முயற்சி விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் ஷேக் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.