கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிக் கூண்டு பாலம் பராமரிப்பு பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கண்ணாடி கூண்டு பாலத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடனடியாக சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதே போன்று கண்ணாடி கூண்டு பாலத்திற்கான ரூ 63 ஆயிரம் பராமரிப்பு செலவு தொகையை அதிகரிக்க வேண்டும்,தமிழக அரசு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து பணிகளை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.