குமரி மாவட்டம் இரும்பிலி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன் (46). கொத்தனார் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் காய்கறி வாங்குவதற்காக பைக்கில் குளச்சல் பீச் சந்திப்பு அருகே உள்ள ஒரு கடைக்கு சென்றார். அப்போது, எதிரே வந்த அரசு பஸ்சின் முன் பகுதியில் எதிர்பாராத விதமாக மோதினார். இதில் பஸ்ஸில் முன் சக்கரத்தில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குளச்சல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான ராஜனுக்கு ஷீபா என்ற மனைவியும் ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளது. ராஜனுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் மட்டுமே ஆகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.