கோவை காந்திபுரத்தில் சிபி இராதாகிருஷ்ணன் வெற்றிக்கு பாஜகவினர் உற்சாகக் கொண்டாட்டம் !

பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கட்சியினர் வெற்றி கொண்டாட்டம்.;

Update: 2025-09-10 07:48 GMT
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றியை தொடர்ந்து கோவை காந்திபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அனைத்து தரப்பினரையும் இணைத்து செயல்பட்ட தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், கட்சிப் பாகுபாடு இன்றி மக்கள் அனைவரும் அவரது வெற்றியை வரவேற்றுள்ளதாகவும் ரமேஷ் குமார் தெரிவித்தார். பாஜகவினர் வெற்றி கோஷங்களை எழுப்பி, இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சி கொண்டாடிய காட்சி காந்திபுரம் முழுவதும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Similar News