ஜிஎஸ்டி குறைப்பால் பொதுமக்கள் பயனடைவார்கள் – நாராயணன் திருப்பதி !
ஜிஎஸ்டி குறைப்பை தீபாவளி பரிசாக மக்களுக்கு வழங்கி இருக்கிறது மத்திய பாஜக அரசு.;
கோவை பீளமேடு பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால் மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வேளாண் கருவிகள் விலை குறைந்து ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். நுகர்வு அதிகரிப்பதன் மூலம் உற்பத்தி, வேலைவாய்ப்பு வளர்ச்சி ஏற்படும் என்றும், மாநில வருவாய் பாதிக்கப்படும் என்ற நிதி அமைச்சரின் கருத்து தவறு எனவும் கூறினார். அவிநாசி மேம்பாலம் திறக்கப்படாததையும், கோவையில் சாலைகள் சரியாக இல்லாததையும் கண்டித்த அவர், அதிமுக உட்கட்சி பிரச்சினைக்கு பாஜக காரணம் இல்லை எனவும் விளக்கினார்.