கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு !

டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்த செங்கோட்டையன் – அதிமுக ஒன்றிணைவு குறித்து பேச்சுவார்த்தை.;

Update: 2025-09-10 08:27 GMT
அதிமுகவில் ஒன்றிணைவு குறித்த கருத்து தெரிவித்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று முன்தினம் ஹரித்துவார் செல்கிறேன் என கூறி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சரை சந்தித்து, தமிழக அரசியல் நிலைமை குறித்து கருத்துகள் பரிமாறியதாக நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இயக்கம் வலிமை பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பேசியதாகவும், இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், ரயில்வே துறை அமைச்சரிடம் ஈரோடு–சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்களின் வசதிக்காக மாற்றி தர வேண்டும் என கோரியதையும், அதற்கான பரிசீலனை நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். மக்கள் பணி மற்றும் இயக்க வலிமைக்காக தொடர்ந்து செயல்படுவேன் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

Similar News