கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்காக சிறப்பு பூஜை !

துணை குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டது.;

Update: 2025-09-10 08:36 GMT
கோவை புளியகுளம் விநாயகர் கோவிலில் நேற்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் ஜே. ரமேஷ்குமார் தலைமையேற்க, தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ராதாகிருஷ்ணன் பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News