சங்கரநாராயண சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா
கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து காலை 8.30 மணி முதல் 11 மணி வரை மங்கள இசை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை தேவதாஅனுக்ஞை, முதல் கால யாகபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடா்ந்து நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரை இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூா்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் ஸ்ரீ சித்திவிநாயகா், ஸ்ரீசங்கர லிங்க சுவாமி, ஸ்ரீசங்கர நாராயணசுவாமி, ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சண்முகா் ஆகிய சுவாமிகளுக்கு வருஷாபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சியை தொடா்ந்து மாலை 7 மணிக்கு பஞ்ச மூா்த்தி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது .