தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு புதிய தமிழகம் கட்சியினர் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை;

Update: 2025-09-11 06:23 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள அழகாபுரி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரன் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியின் குருவிகுளம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் குட்டிதுரை, கிளைச் செயலாளர் அய்யனார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News