நல்லாம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் - மக்கள் அவதி !
பாதாள சாக்கடைப் பணிகள் முடிந்தும் சாலைகள் சீரமைக்கப்படாமல் மக்கள் கடும் சிரமம்.;
கோவை நல்லாம்பாளையம் ராமசாமி நகர் எக்ஸ்டென்ஷன், பாரதி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்தும் சாலைகள் சரிசெய்யப்படாததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பொதுமக்கள் தினசரி கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வாகனங்களை எந்த வழியாக இயக்குவது என்றே தெரியாமல் மக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பணிகள் நிறைவடைந்தும் சாலைகள் சரிசெய்யப்படவில்லை. சாலையின் மோசமான நிலைமை காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவும் பெரும் சிரமமாக உள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.