போலி இறப்புச் சான்றிதழ் மோசடி – திரைப்பட தயாரிப்பாளருக்கு மிரட்டல் : கோவையில் கேரளா தனிப்படை விசாரணை !

போலி இறப்புச் சான்றிதழ் மோசடியில் சிக்கிய தயாரிப்பாளருக்கு செல்போனில் மிரட்டல் – கோவையில் தனிப்படை விசாரணை முன்னெடுப்பு.;

Update: 2025-09-11 07:40 GMT
கோவையைச் சேர்ந்த மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் குமார் ரெட்டி, போலி இறப்புச் சான்றிதழ் மூலம் 6 கோடி ரூபாய் மோசடியில் சிக்கியுள்ளார். அவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அவரது பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து, படம் விற்கப்பட்டதாக தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் தலைமறைவாக உள்ள நிலையில், கேரளா எர்ணாகுளம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சஞ்சய் குமார் ரெட்டிக்கு செல்போனில் அழைத்து, வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கோவையில் படிக்கும் மகளை கடத்துவோம் என்று ஒருவர் மிரட்டியுள்ளார். இந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கேரளா தனிப்படையினருடன் இணைந்து கோவையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News