திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது குருபூஜையை முன்னிட்டு இன்று புரட்சி பாரதம் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் புரட்சி பாரதம் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமையில் கட்சியினர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.