தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச. தலைமையிலான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச. தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணானிளனிமற்றும் ஆணையத்தின் துணைத்தலைவர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.;

Update: 2025-09-11 13:29 GMT
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச. தலைமையிலான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், சிறுபான்மையின மக்களின் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிதல் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் இன்று (11.09.2025) மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச. தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணானிளனிமற்றும் ஆணையத்தின் துணைத்தலைவர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை தந்த ஆணைத்தின் தலைவைர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கள் அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். அதன்பின்னர் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்களிடம் ஒவ்வொருவராக கோரிக்கைகளை கேட்டறிந்த ஆணையத்தின் தலைவர் அவர்கள், ஒவ்வொரு கோரிக்கையின் மீதும் சம்மந்தப்பட்ட துறை அலுவர்களை உரிய பதில் அளிக்கச்சொல்லி, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். பின்னர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 141 பயனாளிகளுக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பிலான அரசு திட்டங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண், வழங்கினார். பின்னர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு துணை முதலமைச்சர், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், சிறுபான்மையின மக்கள், சிறுபான்மையின அமைப்புகள், கல்விநிறுவனங்களின் கோரிக்கைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்டம் வாரியாக கலந்தாய்வுக்கூட்டம் ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 31 மாவட்டங்களில் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்ட்ட கூட்டங்களில் சிறுபான்யினர்களால் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. குறிப்பாக கல்லறைத்தோட்டம் வேண்டும், ஏற்கனவே உள்ள கல்லறைத்தோட்டங்களுக்கு உரிய பட்டா, பாதை மற்றும் சுற்றுச்சுவர்வேண்டும், பழைய ஆலயங்கள், மசூதிகளை புனரமைக்க வேண்டும், அந்த கட்டடங்களுக்கு தடையின்மைச்சான்று, பட்டா வேண்டும், சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்கள், அங்கீராம், ஆலயங்கள் மற்றும் மசூதிகளில் வழிபாட்டுக்கூடங்களுக்கு வணிக வரியாக இல்லாம் சாதாரணமாக மின்கட்டணம் இருக்க வேண்டும் தலங்களில் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பெறப்பட்ட 839 மனுக்களில் சுமார் 661க்கும் மேற்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த கலந்தாய்வுக்கூட்டம் முடிந்த பிறகு பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் அரசுக்கு சட்ட அளவிலும், கொள்கை அளவிலும் மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகள் குறித்த அறிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பசேரா,இ.கா.ப, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல்பிரபு, மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், ஆணைத்தின் உறுப்பினர்கள் ஹேமில்டன் வெல்சன், நாகூர் அ.ஹ.நஜிமுதீன், பிரவீன் குமார் டாட்டியா, ராஜேந்திர பிரசாத், எம்.ரமீத்கபூர், ஜெ.முகம்மது ரஃபி, சு.வசந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்,ரெ.சுரேஷ்குமார் மற்றும் அனைத்துத்துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News