பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.;

Update: 2025-09-11 17:33 GMT
தமிழக டிஜிபி-யாக பணிபுரிந்துவந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபி-யாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நீதிபதி அருள்முருகன் அமர்ந்து விசாரணை வந்தபோது, இந்த வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டிஜிபி நியமனம் செய்யப்பட இருப்பதால், மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Similar News