காரியாபட்டி அருகே விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட கறவை பசுமாடு மீது இடி தாக்கி உயிரிழப்பு*

காரியாபட்டி அருகே விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட கறவை பசுமாடு மீது இடி தாக்கி உயிரிழப்பு*;

Update: 2025-09-11 17:37 GMT
காரியாபட்டி அருகே விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட கறவை பசுமாடு மீது இடி தாக்கி உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேலக்கள்ளங்குளம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் விவசாயம் பார்த்து கறவை பசுமாடு மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அப்பகுதியில் கருமேகங்களுடன் சூழ்ந்த நிலையில் திடீரென விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட கறவை பசு மாடு மீது இடி தாக்கியதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த கறவை பசுமாடு மூலம் தன் வாழ்க்கையை நடத்தி வந்த பெரியசாமிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும் இடிதாக்கி உயிரிழந்த பசுமாட்டினை அக்கம் பக்கத்தினர் நேரில் பார்த்து கதறி அழுது வருகின்றனர். விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட கறவை பசு மாடு மீது இடிதாக்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News