சபரீசனின் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தனது மருமகன் சபரீசனின் தந்தையின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘எனது மருமகன் சபரீசனின் தந்தையார் வேதமூர்த்தி மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வேதமூர்த்தியின் மறைவு ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் சபரீசனுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்