பேராவூரணி வட்டாரத்தில் இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் 

விழிப்புணர்வு முகாம்;

Update: 2025-09-12 04:23 GMT
தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம் விவசாயிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்றது. பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த மடத்திக்காடு, ஆவணம் விவசாயிகளுடன் பேராவூரணி அரசு  மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 50 பேர் மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி முருகன் வயலுக்கு அழைத்துச் சென்று இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், நம் முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்த முறை, பசுமைப் புரட்சி பற்றியும் தற்போதைய சூழலில் இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, இயற்கை விவசாயத்தால் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது என விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. மேலும், இயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு இணையாக பூச்சி விரட்டிகள் பயிர்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.  இயற்கை விவசாயத்தின் இடுபொருட்களான மீன் அமிலம், பஞ்சகாவ்யம் ,ஐந்து இலைக் கரைசல், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் உள்ளிட்டவை தயாரிக்கும் முறை மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.  முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் ராணி தலைமையில் அட்மா திட்ட அலுவலர்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி, உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் நெடுஞ்செழியன், சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News