ஈ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் தாய்ப்பால் ஊட்டும் பிரிவு திறப்பு !

ப்ராஜெக்ட் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ், தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் ஊட்டும் பிரிவு சிறப்பு !;

Update: 2025-09-12 09:01 GMT
கோவை பெண்டா லேடீஸ் சர்கிள் 37 சார்பில் “ப்ராஜெக்ட் ஆயுஷ்மான்” திட்டத்தின் கீழ், கோவை ஈ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நேற்று தாய்ப்பால் ஊட்டும் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் கே.எஸ். மகேஸ்வரன், குடியிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் எம். மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, சமூக நலனுக்கான இந்த முயற்சியை பாராட்டினர். பிராந்திய தலைவர் எல்.எம்.எப். மந்தகினி துளசி, முன்னாள் பகுதி ஆணையர் புவனா சுரி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்று, லேடீஸ் சர்கிளின் சேவையை சிறப்பித்தனர். கோவை பெண்டா லேடீஸ் சர்கிள் 37 தலைவர் பேசுகையில், இந்த பிரிவு தாய்மார்களுக்கு பாதுகாப்பான, சுகமான இடத்தை வழங்குவதோடு, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்றார். வசதியான அமர்விடங்களும் விழிப்புணர்வு தகவல்களும் கொண்ட இந்த பிரிவு, தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News