கோவை: மதுக்கரை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் !

மதுக்கரை பகுதியில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உடனடி தீர்வு.;

Update: 2025-09-12 09:07 GMT
கோவை, முதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் நடைபெறும் இந்த முகாம், கோவை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே நாளில் ஒருங்கிணைக்கப்பட்டது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தெற்கு, மதுக்கரை, கோவை மாநகராட்சி வடக்கு, மதுக்கரை நகராட்சி, வெட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றன. மதுக்கரையில் நடைபெற்ற முகாமில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றை உடனடியாக அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த முகாமினையும் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Similar News