தஞ்சாவூரில், தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உடல், கண் தானம் ஒப்புதல் பத்திரம் வழங்கல்
உடல் தானம்;
தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநகரக் குழு சார்பில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பணியாற்றி மறைந்த தோழர் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உடல் தானம், கண்தானம் உறுதிமொழிப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகரக்குழு உறுப்பினர் சி.ராஜன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெயபால், பி.செந்தில்குமார், எம்.சரவணன், கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, இ.வசந்தி, மாநகரக்குழு உறுப்பினர்கள் கோஸ்கனி, எம்.ராஜன், அரங்கத்தோழர்கள் ப.சத்தியநாதன், எஸ்.கோதண்டபாணி, அம்மாபேட்டை மயில்வாகனன், முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், 23 பேர் தங்கள் உடல், கண் ஆகியவற்றை தானமாக வழங்க ஒப்புதல் பத்திரம் வழங்கினர். உடல் தானம் ஒப்புதல் பத்திரம் வழங்கியவர்கள் விவரம் 1சின்னை. பாண்டியன் 2.ஆர்.மனோகரன் 3.சி ஜெயபால் 4 பி.செந்தில்குமார் 5.கே. அருளரசன் 6.என்.சரவணன் 7.கே. அபிமன்னன் 8.என்.குருசாமி 9.கே.ராஜாமணி (என்.குருசாமி மனைவி) 10.இ.வசந்தி 11. கே.அன்பு 12. எஸ்.பாக்கியம் (கே. அன்பு மனைவி) 13. எம்.ராஜன் 14. வெ.திருநாவுக்கரசு 15. எம். ஜீவா 16. ஏ.ஜெயராஜ் 17. எம்.ஜெகன் 18. கே.பன்னீர்செல்வம் 19. கே.முனியாண்டி 20. மயில்வாகனன் 21. விக்னேஸ்வரன் 22. முத்து.பன்னீர்செல்வம் 23. எஸ்.வனரோஜா