வடகோவை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: மெமு ரெயில் ரத்து !
பராமரிப்பு பணி காரணமாக கோவை வழியாக இயக்கப்படும் ரயில் சேவை ரத்து.;
வடகோவை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) போத்தனூர்–மேட்டுப்பாளையம் மெமு ரெயில் (எண் 66612) மற்றும் மேட்டுப்பாளையம்–போத்தனூர் மெமு ரெயில் (எண் 66615) சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆலப்புழா–தன்பாத் விரைவு (13352), எர்ணாகுளம்–பெங்களூர் விரைவு (12678), நெல்லை–பிலாஸ்பூர் சிறப்பு (22620) உள்ளிட்ட ரெயில்கள் நாளை போத்தனூர்–இருகூர் வழியாக மாற்றி இயக்கப்படுகின்றன. இதனால் இவை கோவை ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது என சேலம் ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.