டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பணி;

Update: 2025-09-13 13:44 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் (ஊரகம்) 2016 முதல் 2022 வரை நிலுவையிலுள்ள வீடுகளை கட்டி முடிக்க வெளி ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் தற்காலிக தொழில் நுட்ப உதவியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட வெளி ஒப்பந்த நிறுவனங்கள் தகுதியான நபர்கள் (டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் கட்டுமானத்துறையில் அனுபவம் பெற்றவர்கள்) உரிய சான்றுகளுடன், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வரும்   17.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News