சூலூரில் கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை !

கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.;

Update: 2025-09-14 07:29 GMT
கோவை மாவட்டம் சூலூர் அருகே செங்கதுறையில் வசித்த விசைத்தறி தொழிலாளர்கள் ஆண்டவர் (45), மணிமேகலை (40) ஆகிய தம்பதியினர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர். சனிக்கிழமை காலை இருவரும் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகள் இல்லாததால் மன உளைச்சலா அல்லது கடன் தொல்லையாலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News