அதிமுகவினர் ஒரு மாதத்தில் ஒன்றிணைவார்கள் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை !

செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் ஒரு மாதத்தில் ஒன்றிணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-14 07:33 GMT
சென்னையில் நடைபெறும் உறவினர் திருமணத்தில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இ.பி.எஸ்.-க்கு கொடுக்கப்பட்ட கெடுவில் தொடர்பான கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே எனக் கூறினார். ஓ.பி.எஸ்., டி.டி.வி ஆதரவாளர்கள் சந்திப்பு குறித்து, இயக்கம் நன்றாக இருக்க வேண்டும், அனைவரும் இணைய வேண்டும், அம்மா ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பதே எனது ஆசை என்றார். அ.தி.மு.க.வில் மீண்டும் ஒன்றிணைவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு மாதத்தில் ஒன்றிணைவார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

Similar News