ஓசூர் அருக டூவீலர் மீதுகார் மோதி டிரைவர் உயிரிழப்பு.

ஓசூர் அருக டூவீலர் மீதுகார் மோதி டிரைவர் உயிரிழப்பு.;

Update: 2025-09-15 00:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருக கிருஷ்ணகிரி அடுத்துள்ள பி.குருபரப்பள்ளி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(51) டிரைவரான இவர் நேற்று முன்தினம் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் தனியார் கிரஷர் அருகே டூவீலரில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி முன்னால் சென்ற கார் மீது மோதியது. அப்போது அந்த கார் கோபாலகிருஷ்ணன் டூவீலர் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஹட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News