கோவை சரவணம்பட்டியில் திடீர் போலீஸ் சோதனை !

சரவணம்பட்டியில் மாணவர்கள், ஐ.டி. ஊழியர்கள் தங்கும் இடங்களில் போலீசாரின் திடீர் சோதனை.;

Update: 2025-09-15 08:37 GMT
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், கோவை சரவணம்பட்டியில் நேற்று மாநகர காவல் துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் திடீர் சோதனை நடைபெற்றது. துடியலூர் ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள், அறைகளில் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் தங்கி வரும் இடங்களில் சோதனை செய்யப்பட்டு, பின்னர் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன.

Similar News