கோவையில் வீட்டுக் கடன் மற்றும் மருத்துவக் கண்காட்சி தொடங்கியது !
கோவை கொடிசியாவில் வீட்டுக் கடன் மற்றும் மருத்துவ கண்காட்சி நடைபெறுகிறது.;
கோவை கொடிசியா வளாகத்தில் தினத்தந்தி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா இணைந்து, நலம் அமைப்பின் சார்பில் வீட்டுக் கடன் மற்றும் மருத்துவக் கண்காட்சி தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். ஆட்சியர், இத்தகைய கண்காட்சிகள் ஏழை, எளிய மக்களுக்கு வீடு மற்றும் கல்விக் கடன் பெற உதவும் எனக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் நீயா நானா கோபிநாத், "தேவையற்ற பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் வாழ்க்கைத் தரமும் முதலீடும் மேம்படும்" என்று அறிவுரை வழங்கினார்.