சங்கரன்கோவிலில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினார்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினார்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அண்ணா பேருந்து நிலையம் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு கழக தலைமை செயற்குழு உறுப்பினரும் மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சருமான VM ராஜலெட்சுமி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இந்த நிகழ்வில் மாநில எம்ஜிஆர் மற்றும் துணை செயலாளரும் சங்கரன்கோவில் நகர்மன்ற துணை தலைவர் கண்ணன் என்ற ராஜு நகர கழக செயலாளர் ஆறுமுகம் ஒன்றிய கழகச் செயலாளர் ரமேஷ் செல்வராஜ் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள் வார்டு கழக செயலாளர்கள் தலைமை கழக பேச்சாளர்கள் என ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்