பெரம்பலூர் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் சாதனை
தேசிய அளவில் நடைபெற்ற கைப்பந்து குழு போட்டிக்கு தமிழ்நாடு அணிக்காக பெரம்பலூர் மாவட்டம் சார்பில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் பயிலும் அறிவுசார் குறைபாடுடைய மாணவர் பூபதி கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.;
பெரம்பலூர் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் சாதனை சிறப்பு ஒலிம்பிக் பாரத் - ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை அறிவுசார் குறைபாடுடையவர் களுக்கான தேசிய அளவிலான கைப்பந்து விளையாட்டு போட்டியில் 16 மாநிலங்கள் கலந்து கொண்டன. தமிழ்நாட்டிலிருந்து பெரம்பலூர் 4 அறிவுசார் குறைபாடுடைய மாணவர்கள், 2 யூனிபைட் பார்ட்னர் கள் (normal students) கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்கள் விவரம் : Tamil Nadu team Athelete (Intellectual challenged students ) 1. Boopathy - 17 yrs. Perambalur district 2. . Dharaninathan. R - 13 yrs Tirupur district 3. Aaron - 18 yrs. Trichy district 4. Sabarish - 17 yrs. Coimbatore district Unified partners 5. R. Jagan -19 yrs. Coimbatore district 6. D. Varun - 19 yrs. Coimbatore district தேசிய அளவில் நடைபெற்ற கைப்பந்து குழு போட்டிக்கு தமிழ்நாடு அணிக்காக பெரம்பலூர் மாவட்டம் சார்பில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் பயிலும் அறிவுசார் குறைபாடுடைய மாணவர் பூபதி கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். (Division 3 , our team got GOLD MEDAL 🥇 Tamilnadu Handball Team) தங்கப்பதக்கம் வென்ற மாணவரை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மா அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ஐயா அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், மற்றும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.