இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி கிளையில் அமுல் ரிச்ப்ளஸ்-வுடன் இணைந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் கடன் திட்டமான ஹரித் கிராந்தி(இயற்கை வேளாண்மை) கடன் திட்டத்தின் மூலம் தனி விவசாயிக்கு ரூ.ஐம்பது லட்சம் வரையிலும் , FPO/FPC-களுக்கு ஐந்து கோடி வரையிலும் கடன்;
இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி கிளையில் அமுல் ரிச்ப்ளஸ்-வுடன் இணைந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் கடன் திட்டமான ஹரித் கிராந்தி(இயற்கை வேளாண்மை) கடன் திட்டத்தின் மூலம் தனி விவசாயிக்கு ரூ.ஐம்பது லட்சம் வரையிலும் , FPO/FPC-களுக்கு ஐந்து கோடி வரையிலும் கடன் கொடுக்கும் இயற்கை வேளாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது இவ்விழாவிற்கு ரிச் ப்ளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் சாரங்கன்,திட்டத் தலைமை ஸ்ரீதர் ஸ்ரீநிவாசன், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி சென்ட்ரல் ஆஃபிஸ்-ன் முதன்மை மேலாளர் கே.ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பரத் குமார், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் முருகையன் , இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மேலாளர் இளவேனில் மற்றும் ஐம்பது மேற்ப்பட்ட விவசாயிகள் ,விவசாய உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்றனர். இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் கடன் திட்டமான ஹரித் கிராந்தி(இயற்கை வேளாண்மை) கடன் திட்டத்தை பற்றி ரிச் ப்ளஸ் நிறுவனத்தின் இயற்கை உரங்களான அமுல் கோல்ட் , அமுல் பவர் ப்ளஸ்,அமுல் ரூட் எக்ஸ்,அமுல் NPK கன்சார்டியம், அமுல் ரிச் ப்ளஸ் ,அமுல் பாஸ்போரிச்,அமுல் ரக்சக், ரிச் ப்ளஸ் பாசல் அம்ரித் பற்றி தெளிவாக ரிச் ப்ளஸ் நிர்வாக இயக்குநர் அசோக் சாரங்கன் மற்றும் திட்டத் தலைமை ஸ்ரீதர் ஸ்ரீநிவாசன் எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியின் நிறைவில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் முருகையன் நன்றியுரைக் கூறினார்.