மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் நீண்ட நாள் கோரிக்கை
லால்குடி மணக்கால் பாலப் பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது இதனால் அந்த பகுதியில் ரயில் இணைப்பும் பாதிக்கிறது எனவே இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் இரண்டாவதாக லால்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பாதுகாப்பான;
திருச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற எம்பி அருண் நேரு தெற்கு ரயில்வே கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி அவர்களை நேரில் சந்தித்து , லால்குடி மணக்கால் பாலப் பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது இதனால் அந்த பகுதியில் ரயில் இணைப்பும் பாதிக்கிறது எனவே இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் இரண்டாவதாக லால்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பாதுகாப்பான இடம் இல்லாததால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் பாதிக்கப்படுகின்றனர் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் நீண்ட நாள் கோரிக்கையாக எழுப்பி வருகின்றனர் எனவே அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதியை செய்து கொடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் மூன்றாவதாக பயணிகள் சீராக ஏறுவதற்கும் ஒட்டுமொத்த செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கும் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி வழிகாட்டுதல் காட்சி பலகைகளை (, Display board)நிறுவுமாறு கேட்டுக்கொள்கிறேன் பயணிகளின் பாதுகாப்பு வசதி மற்றும் பயன் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு இந்த இந்த மூன்று விஷயங்களும் மிக முக்கியமானவை இதற்கான நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தர்.