பெரம்பலூர் மாவட்டம் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 04328-296352 மற்றும் 94990 55913 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்;
பெரம்பலூர் மாவட்டம் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா 20.09.2025 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தகவல். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20.09.2025 அன்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பெரம்பலூர், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னனி தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஓசூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி, மற்றும் அரியலூர் பகுதிகளில் அமைந்துள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 7,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐடிஐ, மற்றும் டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மசி, பி.இ, பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஒட்டுநர், டெய்லர் மற்றும் ஆசிரியர் கல்வித்தகுதியுடையோர்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலையளிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகிய காலதிறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல் மற்றும் சுயதொழில் மற்றும் கடன் உதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார் எண், பயோடேட்டா, கல்விச்சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login–ல் தங்களது விவரங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலைநாடுநர்கள் வேலையளிக்கும் நிறுவனங்களுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம். இந்த அரிய வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 04328-296352 மற்றும் 94990 55913 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.