உசிலம்பட்டியில் பிளஸ் டூ மாணவி மாயம்
மதுரை உசிலம்பட்டி அருகே பிளஸ் 2 மாணவி மாயம் என தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் குன்னத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை என்பவரின் 16 வயது மகள் பூச்சி பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார் இவர் கடந்த 15 ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (செப்.17) மதியம் இவரது தந்தை அழகுமலை உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.