கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு;

Update: 2025-09-19 12:21 GMT
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கன்னிவாடி ஆலந்தூரான்பட்டி ஊர் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர் அந்தப் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது-: ஊர் பெரிய தனம் தங்கராஜ் மீது ஊரில் பொய்யான செய்திகளை பரப்பியும், திமுக அரசியல் கட்சியின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தியும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் பெயரை தவறாக பயன்படுத்தி எங்கள் ஊரை சேர்ந்த தங்கராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகளான பாலாஜி, ஆறுமுகம், ராஜா ஆகியோரை அவமானப்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் கோவிலில் ஊழல் நடந்ததாக பொய்யான செய்திகளை பரப்பியும், அசிங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Similar News