வாலிபர் கொலை. உறவினர்கள் சாலை மறியல்
மதுரை மேலூரில் வாலிபர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய போது மறியல் போராட்டம் நடந்தது;
மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் இரு தினங்களுக்கு முன்பு புது சுக்காம்பட்டியை சேர்ந்த ராம் பிரசாத் (27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது மேலூர் வினோபா காலனி சேர்ந்தவர் வந்த டூவீலருடன் மோதியதில் தகராறு ஏற்பட்டுள்ளது . அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பிய பின்பு ராம் பிரசாத் தனது வீட்டிற்கு விநோபா காலனி வழியாக புதுசுக்காம்படிக்கு சென்றபோது நான்குக்கு மேற்பட்ட நபர்கள் ராம் பிரசாத் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (செப்.19) காலை அவர் உயிரிழந்தார் இதனால் அவரது உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறி மேலூர் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.