உசிலம்பட்டியில் முன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை உசிலம்பட்டியில் கள்ளர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பழைய அரசு மேல்நிலைப் பள்ளயில் மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கூடாது என, வலியுறுத்தி, கள்ளர் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன இன்று (செப்.19)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.