திருமணியான் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா். ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.;

Update: 2025-09-19 16:54 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அடையபலம், பெரிய ஏரி திருமணியான் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விக்னேஷ்வர பூஜை, முதல், இரண்டாம் கால யாகசாலை பூஜை, தம்பதியா் சங்கல்பம், யாத்ரா தானம் செய்யப்பட்டு, பின்னா் கலச புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா். ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Similar News