ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி பாலாலயம்.
நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பஜனை கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி பாலாலயம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமியை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து பாலாலயம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.