பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பள்ளித் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டு ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா மற்றும் கேடயம் வழங்குதல்
பனைஓலைப்பாடி அரசுப் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் உள்ளிட்ட நிா்வாக குழு உறுப்பினா்கள், கிராம கல்விக்குழு தலைவா், ஊா் முக்கியப் பிரமுகா்கள், முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.;
ஆசிரியா் தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பள்ளித் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டு ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா மற்றும் கேடயம் வழங்குதல், 2024 - 25-ஆம் ஆண்டு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், தொழிலதிபா் காந்தி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தின நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, கேடயம் வழங்கினாா். மேலும், பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கேடயம், ரொக்கப்பரிசுகள் முன்னாள் மாணவா்கள் சாா்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பனைஓலைப்பாடி அரசுப் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் உள்ளிட்ட நிா்வாக குழு உறுப்பினா்கள், கிராம கல்விக்குழு தலைவா், ஊா் முக்கியப் பிரமுகா்கள், முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.