ஜவ்வாது மலை பழங்குடியின பெண்களுக்கு விஞ்ஞானி மூலம் ஒரு நாள் நேரடி செயல்முறை விளக்க சிறப்பு பயிற்சி வகுப்பு.
ஐம்பதற்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் பங்கேற்பு.;
சிறப்புச் செய்தி. ஜவ்வாது மலை பழங்குடியின பெண்களுக்கு விஞ்ஞானி மூலம் ஒரு நாள் நேரடி செயல்முறை விளக்க சிறப்பு பயிற்சி வகுப்பு. ஐம்பதற்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் பங்கேற்பு. போளூர் செப் - 20. போளூர் அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் அமைந்துள்ள அத்திப்பட்டு மலை கிராமத்தில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மத்திய அரசின் ஐ.சி .எஃப்.ஆர்.இ மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை இணைந்து தொல்குடியினர் வேளாண் மேலாண்மை திட்டம் ஐந்திணை மூலமாக பழங்குடியின மக்களுக்கு ஜவ்வாது மலைப்பகுதியில் விளையும் புளியிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிப்பதற்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் அமைந்துள்ள அத்திப்பட்டு மலை கிராமத்தில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மத்திய அரசின் ஐ சி எஃப் ஆர் இ மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை இணைந்து தொல்குடியினர் வேளாண் மேலாண்மை திட்டம் ஐந்திணை மூலமாக பழங்குடியின மக்களுக்கு ஜவ்வாது மலைப்பகுதியில் விளையும் புளியிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிப்பதற்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட பழங்குடியினர் நலத்துறை துணை ஆட்சியர் கோமதி தலைமையிலும் கோயம்புத்தூர் விஞ்ஞானி முனைவர் மாயவேல் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் பாலு வரவேற்புரை வழங்கினார். போளூர் அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. இங்குள்ள மலைவாழ் மக்கள் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் திணை, சாமை, கேழ்வரகு, புளி, உள்ளிட்ட பொருட்களை பயிரிட்டு காலம் காலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு மத்திய அரசும் பழங்குடி இன மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நல திட்டங்களையும் சிறப்பு முகாம்களையும் நடத்தி பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் மத்திய அரசின் ஐ சி எஃப் ஆர் இ மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை இணைந்து ஜவ்வாது மலைப்பகுதியில் இயற்கையாகவே அதிகமாக விளையக்கூடிய புளியம் பழத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இங்குள்ள புளியம்பழம் இயற்கையாகவே அதிக சுவை நிறைந்ததாகவும் இயற்கையான முறையில் விளைவதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். மேலும் இவற்றை விற்பனை செய்வதற்காக மாநில அரசு பழங்குடியினர் நலத்துறை உடன் இணைந்து பல்வேறு வகையில் புளியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும் அதன் ஒரு பகுதியாக புளியம் பழத்தை கொட்டை எடுத்து விற்பனை செய்வதால் மலைவாழ் மக்களுக்கு குறைந்த அளவே லாபம் கிடைப்பதாகவும் மேலும் அவற்றை மதிப்பு கூட்டு முறையில் விற்பனை செய்வதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என மத்திய அரசு மாநில அரசு இணைந்து ஜவ்வாது பழங்குடியின மக்களுக்கு புளியம்பழத்தில் இருந்து ஜாம், புளியம்பழம் சாறு (ஜூஸ்), புளி சாதப் பொடி, இன்ஸ்டன்ட் புலிக்கூழ், புளிபானகம் புளியம்பழம் சர்பத் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதற்கான நேரடி செய்முறை பயிற்சி அளித்தனர். மேலும் உலகத்திலேயே அறிய மரமாக கண்டறியக்கூடிய சிகப்பு நிற புளியம்பழத்தை மலைவாழ் மக்களிடம் காண்பித்து ஆவற்றின் சிறப்புகளை எடுத்து கூறினர். அதாவது இந்த சிகப்பு நிற புளியம்பழத்தை உணவிலோ அல்லது நேரடியாகவோ அல்லது மதிப்பு கூட்டு பொருள்களின் மூலம் நாம் உண்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய அதிக ஆற்றல் கிடைக்க பெறும், இந்த சிவப்பு நிற புளியம்பழத்தை உண்பதின் மூலமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும் எனவும் இந்த சிகப்பு நிற புளியம்பழம் மரங்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே வெறும் 46 மரங்கள் மட்டுமே உள்ளன அவற்றை மேலும் அதிகரிக்க வேண்டும் என சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மலைவாழ் மக்கள் பெண்களிடம் வழங்கி அவற்றை பராமரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர். இதுகுறித்து : மாயவேல் விஞ்ஞானி தெரிவிக்கையில் : கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் குழுவினர் புளியில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறந்த ரக புளியினை தேர்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றோம். புளியில் மூன்று வகைகள் உள்ளன அவற்றின் புளிப்பு புளி, இனிப்பு புளி, சிகப்பு புளி அதிலும் சிகப்பு புளி அதிக மருத்துவ தன்மை கொண்ட புளியாகவும் அறிய வகை புளியாகவும் உள்ளன. மேலும் புளியின் மருத்துவ குணங்கள் மற்றும் புளியினால் கிடைக்க பெறும் பயன்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து பேசினார். அதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற பழங்குடியின பெண் ரோஜா தெரிவிக்கையில் : தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மத்திய அரசின் ஐ சி எஃப் ஆர் இ மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை இணைந்து எங்களுக்கு ஒரு நாள் புளியின் மூலம் தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டு பொருளின் பயிற்சி வகுப்பு செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர் இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வகுப்பாக அமைந்துள்ளது என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் பாலு தெரிவிக்கையில். : ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள அத்திப்பட்டு பயிற்சி நிலையத்தில் பழங்குடியினர் பெண்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்று. இப்ப பயிற்சி வகுப்பு கோவை வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவன விஞ்ஞானி முனைவர் மாயவில் குழுவினர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் புளி மூலம் எவ்வாறு மதிப்புக்கு கூட்டுப் பொருட்கள் தயாரித்து அவற்றை விற்பனைக்கு சந்தைப்படுத்தலாம் என்பது குறித்தும் செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர் இதனால் பழங்குடியின பெண்கள் தொழில் முனைவோராக மாற அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். இறுதியாக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 50 பழங்குடியின பெண்களுக்கு அரிய வகை சிகப்பு புளிய மரக்கன்றுகள் மற்றும் புளியம்பழம் உளர்த்துவதற்கான தார் பையினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது உடன் தொழில் நுட்ப வல்லுநர்கள் மருதுபாண்டி, ஜெயக்குமார், அக்ஷயா ராதாகிருஷ்ணன், அமரவில் பாக்கியராஜ் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர். பட விளக்கம் : ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பழங்குடியின பெண்களுக்கு மாவட்ட பழங்குடியினர் நலத்துறை துணை ஆட்சியர் கோமதி தலைமையிலும் கோயம்புத்தூர் விஞ்ஞானி முனைவர் மாயவேல் முன்னிலையிலும் நேரடி செய்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர். 2.கோயம்புத்தூர் விஞ்ஞானி முனைவர் மாயவேல் பழங்குடியின பெண்களுக்கு அரிய வகை சிகப்பு நிற புளிய மரக்கன்றுகளை வழங்கினார். 3. பயிற்சி வகுப்பின் முடிவில் முனைவர் விஞ்ஞானி மாயவேல் விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் பாலு மற்றும் பழங்குடியின பெண்கள் உள்ளிட்டோர் பயிற்சி நிறைவாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 4. முனைவர் மாயவேல் (பயிற்சி அளித்த விஞ்ஞானி) 5. ரோஜா (பயிற்சி பெற்ற பெண்)