ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநருமான தீபக்ஜேக்கப் தலைமையில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநருமான தீபக்ஜேக்கப் தலைமையில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்துவது குறித்தும், தற்போது வரை நடத்தப்பட்ட முகாம்கள் குறித்தும், இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா்தர மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட்ட விவரங்கள் குறித்தும், இந்த முகாம்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்து, முகாம் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும், முறையான குடிநீா், இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.