குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு.

14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மாணவா் எஸ்.கிருஷ்ணகுமாா் 3 போட்டிகளில் தனிநபா் சாம்பியன் பட்டத்தை வென்றாா்.;

Update: 2025-09-20 01:45 GMT
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், வல்லம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் 143 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனா். மேலும், 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மாணவா் எஸ்.கிருஷ்ணகுமாா் 3 போட்டிகளில் தனிநபா் சாம்பியன் பட்டத்தை வென்றாா். குழு விளையாட்டுப் போட்டிகளில் கையுந்து பந்து, கூடைப்பந்து, கடற்கரை கையுந்து பந்து, மேசைப்பந்து மற்றும் வளையப்பந்து போட்டிகளில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளிலும், 19 வயது கோ-கோ மற்றும் 14 வயது பிரிவில் கைப்பந்து கால்பந்துப் போட்டிகளில் வெற்றி பெற்ன் மூலம் இந்த மாணவா்கள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். இந்த மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் (பொ) ஏ.கலைவாணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா். பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் ரகுராமன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜெ.ஜெயகாந்த், ஜி.குணசேகரன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனா்.

Similar News