எம்ஜிஆர் ஐ விட பெண்களுக்கு அதிக திட்டங்களை கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் தான்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டோம், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம்! டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் - தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை தமிழினியன் சிறப்புரையாற்றினார்கள்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்-எம்.பிரபாகரன். எம்.எல்.ஏ.;

Update: 2025-09-22 17:01 GMT
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டோம், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம்! டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் - தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை தமிழினியன் சிறப்புரையாற்றினார்கள்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்-எம்.பிரபாகரன். எம்.எல்.ஏ.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன் மொழியப்பட்ட்டுள்ள "தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம்" என்ற தீர்மான ஏற்புக் கூட்டங்கள், மாண்புமிகு கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கழக துணைப் பொதுச்செயலாளர் - மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, 22.09.2025, திங்கட்கிழமை,மாலை 6.00 மணியளவில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற தீர்மான ஏற்பு கூட்டத்திற்கு , பெரம்பலூர் ஒன்றிய கழகச் செயலாளர் எம்.இராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமை வகித்தார். இதில் மாநில விவசாய அணி செயலாளர்- டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்.Ex.MP. கலந்து கொண்டு பேசுகையில், புதியதாக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அண்ணா, கலைஞருக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விட்டால் யாரும் இல்லை. புதியதாக வருபவர்களைப்பற்றி பேசி நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கே துரோகம் செய்தார், அமித்ஷாவிற்கும் நிச்சயமாக துரோகம் செய்வார். ஒன்றிய அரசிடம் பல்வேறு திட்டங்களுக்காக அனுமதி கேட்டு பல மாநில முதலமைச்சர்கள் காத்திருந்தனர். ஆனால் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல், துணிச்சலாக செயல்படுத்தினார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காலை உணவுத் திட்டம் தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் அதிகளவில் திட்டங்களை செயல்படுத்தியது யார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.ன என்று ஏ.கே.எஸ்.விஜயன் பேசினார். தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை தமிழினியன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி,‌ மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுசெல்வி ராஜேந்திரன், எஸ்.அண்ணாதுரை, ராமச்சந்திரன், ஆர்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்‌.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், வேப்பூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் அழகு.நீலமேகம், அரசு வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், அரும்பாவூர் பேரூர் கழகச் செயலாளர்‌ ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர்,லெப்பைக்குடிக்காடு பேரூர் கழகச் செயலாளர் ஏ.எஸ்.ஜாகிர்உசேன், குரும்பலூர் பேரூர் கழகச் செயலாளர் எம்.வெங்கடேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், ஆர்.அருண், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ)அப்துல் பாரூக், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கவியரசு,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வி‌சி.ரவி உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்‌.மணிவாசகம் நன்றியுரையாற்றினார்.

Similar News