ஜிம்கானா கிளப் பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு
ஜிம்கானா கிளப் பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு;
தூத்துக்குடி ஜிம்கானா கிளப் 96வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய தலைவராக முன்னாள் ரோட்டரி ஆளுநர் வில்சன் குழுமங்களின் நிறுவனர் ஜேபி ஜோ வில்லவராயரின் மகன் ஜே. பிண்டோ வில்லவராயர் ஏக மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முக்கிய பிரமுகர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில், ரோட்டரி முன்னாள் ஆளுநர்கள் ஆறுமுக பாண்டியன், ஜோ ஜேசையா வில்லவராயர், முன்னாள் கிளப் தலைவர்கள் ஜோ பிரகாஷ், விவிடி கோடிஸ்வரன், இந்து ட்ரேடர்ஸ் உரிமையாளர் பாலா சங்கர், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் ஞானராஜ், பிரேம் வெற்றி, செசில் மச்சாடோ, AICCI செயலாளர் சுரேஷ் குமார், வழக்கறிஞர் அசோக், செலிஸ்டின் வில்லவராயர், மணவை. ரூஸ்வால்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.