சங்கரன்கோவில்: தேங்கிய கழிவுநீர் - நகர்மன்றத் தலைவர் ஆய்வு
தேங்கிய கழிவுநீர் - நகர்மன்றத் தலைவர் ஆய்வு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் நீண்ட நாட்களாக வாருகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் கௌசல்யா மற்றும் அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். கழிவுநீர் ஓடை அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு அப்பகுதி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.