மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-09-23 08:20 GMT
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கான ஒழுங்குமுறை தொடர்பாக மாநகராட்சி மைய அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வியாபாரிகள் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல், மாநகராட்சி ஒதுக்கிய இடங்களில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், உரிமம் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதோடு, வியாபாரிகளுக்கு தொழில் கடன் வழங்கப்படுவதையும் குறிப்பிட்டார். மாசற்ற பசுமையான மாநகரை உருவாக்க மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேயர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, காவல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபார பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News