தேர்தல் செலவின அறிவிக்கை தாக்கல்: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு

தேர்தல் செலவின அறிவிக்கை தாக்கல்: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு;

Update: 2025-09-23 10:03 GMT
தேர்தல் செலவின அறிவிக்கையினை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையமானது மக்கள் பிரநிதித்துவச் சட்டம்,1951 பிரிவு 29 -ஏன்படி அரசியல் கட்சிகளை பதிவு செய்கிறது. அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விதிமுறைகள் பத்தி 3(xx) ன்படி எந்தவொரு பதிவு பெற்ற அரசியல் கட்சியினரும், தங்களது கட்சி சட்டதிட்டத்தின்படி, வருடாந்திர தணிக்கை அறிக்கையினை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். ஆனால், 57-டி, சாத்தூர் மெயின் ரோடு, கோவில்பட்டி-628502 என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்ட யூனிவர்சல் பிரதர் கூட் மூவ்மென்ட்”(Universal Brotherhood Movement), என்ற பதிவு பெற்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியானது தங்களது வருடாந்திர தணிக்கை அறிக்கையினை, 2021-2022, 2022-23 மற்றும் 2023-2024 நிதி ஆண்டுகளுக்கு, தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்பதாலும், பொது தேர்தலில் போட்டியிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில், தேர்தல் செலவின அறிவிக்கையினை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், இந்திய தேர்தல் ஆணையம், மேற்படி அரசியல் கட்சியிடம் உரிய விளக்கம் பெற்று சமர்பிக்க அறிவுரை வழங்கியுள்ளதால், தலைமை தேர்தல் அலுவலர், மற்றும் அரசு செயலாளர், பொது(தேர்தல்), சென்னை அவர்களால், மேற்படி அரசியல் கட்சிக்கு, தலைமை தேர்தல் அலுவலர், சென்னை அவர்களின் காரணம் கேட்கும் அறிவிப்பு எண் 7920/2025-1 பொது (தேர்தல்-4) துறை நாள் 19-9-2025 ன்படி, மேற்படி அரசியல் கட்சியின் தலைவர் அல்லது பொது செயலாளர். தகுந்த ஆவணங்களுடன் உரிய மனுவினை, தனது அபிடவுட் உடன் இணைத்து, ஒப்பம் செய்து 10-10-2025ற்குள் தலைமை தேர்தல் அலுவலர், சென்னைக்கு அனுப்பி விட்டு, 10-10-2025 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தலைமை தேர்தல் அலுவலர், சென்னை முன்பு கண்டிப்பாக ஆஜர் ஆக வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆஜராகாத பட்சத்தில் தேர்தல் ஆணையத்தினால், தகுந்த ஆணைகள் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News